இந்தியா

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் தீவிபத்து – 07 பேர் உயிரிழப்பு

மும்பையில் 04 மாடிக் கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அவசரக்கால மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேற்கு வங்கத்தின் தாராபீத் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலும் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில்  07 பேர் உயரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

தீ விபத்து தொடர்பான சூழ்நிலைகளைக் கண்டறிய, அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே