உலகம்

அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்த இஸ்ரேல்!

  • May 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தடுப்பு மையங்களில் இருந்த பாலஸ்தீன கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச்சாடடுகள் காரணமாக  கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தூதர்  டேனி டானன் (Danny Danon ) இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஷ இஸ்ரேலைக் கறுப்புப் […]

உலகம்

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்றும், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது,  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போரை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த இணக்கப்பாடும் எட்டவில்லை.  இதற்கிடையே ஹோர்மூஸ் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

உலகம்

ஈரானின் நாணய பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

  • April 30, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நிலையற்ற போர் காரணமாக ஈரானின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தேசிய நாணயமான ரியால், டொலருக்கு 1.8 மில்லியன் என்ற சாதனை அளவிலான வீழ்ச்சியைச் பதிவுசெய்துள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய போரின் ஆரம்ப வாரங்களில், நாட்டிற்குள் வர்த்தகமோ அல்லது இறக்குமதிகளோ குறைவாக இருந்ததால், ரியால் நாணயம் நிலையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரியால் சரியத் தொடங்கி, நேற்று  சாதனை அளவிலான வீழ்ச்சியை எட்டியது. ரியாலின் வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும் […]

உலகம்

இயேசு கிறிஸ்து சிலை சிதைப்பு: விசாரணைகள் ஆரம்பம்

  • April 20, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே,  இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் எழும்பி வருகின்றது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இப் படம்  சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம்

250 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நேற்று (08) லெபனான் மீது நடத்திய மிகக்கடுமையான தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

“இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்”

  • March 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் விடுத்த அவசர உத்தரவு

  • March 22, 2026
  • 0 Comments

தெற்கு இஸ்ரேலின் ஆராட் (Arad) மற்றும் டிமோனா (Dimona) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் முழுவதும் இன்று மற்றும் நாளை நேரடி வகுப்புகளை இரத்து செய்வதாக அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆராட் மற்றும் டிமோனா பகுதிகளில் நடத்தப்பட்ட 2 ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக சமூகமளித்து […]

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

டுபாய் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் பாரிய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டுபாயின் புகழ்பெற்ற ‘பாம் ஜுமேரா’ (Palm Jumeirah) பகுதியில் உள்ள ‘ஃபேர்மாண்ட் தி பாம்’ (Fairmont The Palm) ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு […]