உலகம்

முழு வளைகுடாக் கடற்கரையையும் கொலைக்களமாக மாற்றுவோம் – IRGC எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால் ஈரானின் முழு வளைகுடாக் கடற்கரையையும் ஒரு கொலைக்களமாக மாற்றிவிடுவோம் என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த தகவல் வந்துள்ளது. அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினால், “சபஹார் முதல் மஹ்ஷஹர் வரையிலான பகுதியை ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக ஈரான் மாற்றிவிடும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். “எதிரியுடன் நேருக்கு நேர் போரிடும் உந்துதலை எங்கள் போராளிகள் […]