என்பிபி அரசுக்கு தேரர் விடுத்துள்ள பகிரங்க சவால்
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் சவால் விடுத்துள்ளார்.
அப்போது இந்த அரசாங்கத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் இந்த அரசாங்கத்துக்கான மக்கள் ஆதரவு என்னவென்பது தெரியவரும்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நியாயப்படுத்தும் வகையில் ஆளுங்கட்சியினர் கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.
தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆதரவு குறைவடைந்துள்ளது. ஏனெனில் உண்மை நிலைவரம் என்னவென்பதை மக்கள் புரிந்துவிட்டனர்.”- என்றார்.




