ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நாமல் கோரிக்கை
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபிய அரசரிடம் மன்னிப்பு கோரும் ஜனாதிபதி, ஞானசார தேரருக்கு இங்கு மன்னிப்பு வழங்கி முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
“நமது ஜனாதிபதி வேறொரு நாட்டின் தலைவரிடம் மன்னிப்பு கேட்க முடியுமென்றால், இங்குத் தனது நடவடிக்கைகள் மூலமாகவும் அவர் முன்னுதாரணத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்” என நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா, அனோஜன் ஆகிய பெயர்களை நாமல் ராஜபக்ச பயன்படுத்தாவிட்டாலும், அவரது உரை இதனை மையப்படுத்தியதாக இருந்தது.





