யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செய்தி

விபத்தில் இரு இளைஞர்கள் பலி: யாழில் சோகம்

  • October 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் தங்களது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிகக் கூடிய வேகத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தினர் என்றும், இதன்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்றும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். அதிவேகம் மற்றும் கவனயீனம் காரணமாக இடம்பெற்ற இந்தக் […]

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் டொம் பாரக் (Tom Barrack) ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். உலகம் செய்தி

பிராந்திய பாதுகாப்பு குறித்து ஈராக், அமெரிக்கா பேச்சு

  • October 13, 2026
  • 0 Comments

பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி (Ali al-Zaidi)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதர் டொம் பாரக் (Tom Barrack) ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். திங்கள்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பின் போது, அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இச்சந்திப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள டொம் பாரக், ஈராக் பிரதமரின் “தலைமைத்துவம் மற்றும் கூட்டாண்மைக்கு” தனது நன்றியை தெரிவித்துள்ளார். […]

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். இலங்கை செய்தி

’13’ ஐ அமுலாக்க மாகாணசபைத் தேர்தலை நடத்தவும்: SJP வலியுறுத்து

  • October 13, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் மற்றும் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய மக்கள் சக்தி மதத்தை முதன்மைப்படுத்தி அரசியல் செய்யும் கட்சி அல்ல. எமது கட்சி அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் கட்சி. நாட்டில் மீண்டும் […]

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2027 ஆசியக் கிண்ண போட்டிகளை நடத்தும் சவூதி அரேபியாவின் சூழ்நிலையைத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் (Football Australia) தெரிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

ஹவுதிகளால் சவூதிக்கு நெருக்கடி: ஆசியக் கிண்ண தொடரும் சிக்கலில்

  • October 13, 2026
  • 0 Comments

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினரால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2027 ஆசியக் கிண்ண போட்டிகளை நடத்தும் சவூதி அரேபியாவின் சூழ்நிலையைத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் (Football Australia) தெரிவித்துள்ளது. ரியாத்தை நோக்கி ஹவுதிகளால் ஏவப்பட்ட ஏவுகணையொன்றை சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி இடைமறித்ததாக தெரிவித்ததைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸ்ர் (Al Nassr) அணி பங்கேற்ற ஆசிய சாம்பியன்ஸ் லீக் போட்டி திங்கள்கிழமை ஒரு மணி நேரம் தாமதமானது. […]

சவூதி அரேபியாவின் 4 நகரங்களுக்கான விமான சேவைகளை இந்தியாவை சேர்ந்த இண்டிகோ (IndiGo) நிறுவனம் ரத்து செய்துள்ளது. இந்தியா செய்தி

சவூதிக்கான விமான சேவை ரத்து-IndiGo நிறுவனம் அறிவிப்பு

  • October 13, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் 4 நகரங்களுக்கான விமான சேவைகளை இந்தியாவை சேர்ந்த இண்டிகோ (IndiGo) நிறுவனம் ரத்து செய்துள்ளது. இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ வெளியிட்டுள்ள பயண ஆலோசனையின்படி, சவூதி அரேபியாவின் ரியாத், ஜித்தாவ், தம்மாம் மற்றும் மதினா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகள் ஒக்டோபர் 17ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் தமது விமானங்களின் நிலையை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அந்நிறுவனம் எக்ஸ் (X) […]

ஈரானுக்கு சீனாவும் ரஷ்யாவும் எந்தக் வகையிலும் உதவி செய்யவில்லை எனத் தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு உதவினால் நடப்பது வேறு: சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

  • October 13, 2026
  • 0 Comments

ஈரானுக்கு சீனாவும் ரஷ்யாவும் எந்தக் வகையிலும் உதவி செய்யவில்லை எனத் தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு உதவினால் மொஸ்கோவும் பீஜிங்கும் அதிகமான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு உதவி செய்வதாக தமது விமர்சகர்களும் எதிராளிகளும் கூறுவதைத் தாம் கவனித்துள்ளதாக டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார். “அவர்கள் உதவி செய்கிறார்கள் என்றால், அது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கலாம். […]

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி அவருக்கு ஆதரவளிக்கும் என, கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஆளுங்கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு

  • October 13, 2026
  • 0 Comments

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி அவருக்கு ஆதரவளிக்கும் என, கட்சியின் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார். எனினும், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான விசாரணை அறிக்கைகள் கிடைத்தால், கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முறையான நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் கண்டுபிடிப்புகள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான நியாயமான காரணங்களை வழங்கினால், தேசிய மக்கள் சக்தி தனது […]

2027ஆம் கல்வி ஆண்டிற்காக 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

15 லட்சம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணக் கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்

  • October 13, 2026
  • 0 Comments

2027ஆம் கல்வி ஆண்டிற்காக 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாடசாலை எழுதுபொருட்கள் கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கான குறித்த திட்டத்தின் கீழ் பாடசாலையில் கல்வி பயிலும் அஸ்வசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக 6,000 ரூபா […]

விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, குவாண்டாஸ் (Qantas) விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கினர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயணிகளுக்கு அதிர்ச்சி: மூட்டைப் பூச்சிகளால் தாமதமான விமானம்

  • October 13, 2026
  • 0 Comments

விமானத்தில் மூட்டைப் பூச்சிகள் கண்டறியப்பட்டதை அடுத்து, குவாண்டாஸ் (Qantas) விமானம் தரையிறக்கப்பட்டதால் பயணிகள் கடும் தாமதத்தை எதிர்நோக்கினர். விமானத்தின் எகனாமிக் பகுதியில் (Economy cabin) பயணித்த பயணிகள், தம்மை மூட்டைப் பூச்சிகள் கடித்ததாகமுறைப்பாடு செய்ததையடுத்து , அவை கண்டறியப்பட்டன. கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி பெர்த்தில் (Perth) இருந்து ரோம் (Rome) நோக்கிப் பயணித்த QF5 ரக விமானத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை ரோமில் இருந்து பெர்த் திரும்பவிருந்த QF6 விமான சேவை […]

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

தடையை மீறி போராட முற்பட்ட CJP தலைவர்கள் கைது

  • October 13, 2026
  • 0 Comments

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர். டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் பகுதியை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அரசாங்கம் தடையடைக்கப்பட்டப் பகுதியாக (De-notified) அறிவித்திருந்தது. அதற்கு மாற்றாக 3 புதிய இடங்களை டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடையை […]