படகு கவிழ்த்து அதிபர் பலி: யாழில் சோகம்!
யாழ். நயினாதீவு கடற்பரப்பில் சிறிய படகில் பயணித்த போது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி, பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நயினாதீவை வசிப்பிடமாகக் கொண்ட, நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், அண்மையில்தான் புங்குடுதீவிலிருந்து இடமாற்றம் பெற்று நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பொறுப்பேற்றிருந்தார். சம்பவ தினமான […]













