ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி

வெளிநாட்டு நிதி உதவி பெற சட்டங்களை திருத்தியது உக்ரைன்

  • October 15, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு நிதியுதவியை பெறுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், பெரும் இராணுவச் செலவு, பொருளாதார மந்தநிலை மற்றும் உக்ரேனிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களால் ஏற்பட்ட உள்நாட்டு வருவாய் இழப்பு ஆகியவற்றால் உக்ரைன் கடும் வரவுசெலவுத் […]

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் நாளை (16) நடத்த உள்ள மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தியா செய்தி

டெல்லியில் நாளை CJP போராட்டம்: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

  • October 15, 2026
  • 0 Comments

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) டெல்லியில் நாளை (16) நடத்த உள்ள மூவர்ணக் கொடி போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) முக்கிய நிர்வாகிகளான அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோர், டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி கன்னோட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் நாளைய தினம் மூவர்ணக் கொடி போராட்டம் நடத்த அந்த அமைப்பு அழைப்பு […]

“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சாதகமான முடிவு கிட்டும்வரை இந்த இடத்தில் இருந்து நகரமாட்டோம்.” – என பௌத்த பிக்குகள் சூளுரைத்துள்ளனர். இலங்கை செய்தி

மழைக்கு மத்தியிலும் தொடரும் பிக்குகளின் போராட்டம்

  • October 15, 2026
  • 0 Comments

“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சாதகமான முடிவு கிட்டும்வரை இந்த இடத்தில் இருந்து நகரமாட்டோம்.” – என பௌத்த பிக்குகள் சூளுரைத்துள்ளனர். மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்னால் அமர்ந்து பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி செயலாளர் சம்பவ இடத்துக்கு வந்து மகாசங்கத்தினருடன் கலந்துரையாடினார். பிக்குகளின் கோரிக்கைகள் அடங்கி மனு அவரிடம் கையளிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பில் பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதகமான முடிவு கிட்டும்வரை […]

“ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பெறுவோம். இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்ட பிக்குகள்: கொழும்பில் பதற்றம்

  • October 15, 2026
  • 0 Comments

“ஞானசார தேரர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையைப் பெறுவோம். இங்கிருந்து எமது போராட்டம் தொடரும். ஞானசார தேரர் மற்றும் பௌத்த சாசனத்துக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்.” இவ்வாறு உலப்பனே சுமங்கல தேரர் சூளுரைத்துள்ளார். ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்பாக திரண்டுள்ள பிக்குகள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி மகாசங்கத்தினரால் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட […]

சீனாவிலிருந்து அதிகரித்துவரும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துதல், அதிகளவில் உயர்ந்துள்ள எரிசக்தி விலைகளைக் குறைத்தல் மற்றும் எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத் திட்டம் தொடர்பான வேறுபாடுகளைக் களைதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இலங்கை செய்தி

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஆரம்பம்: சீன ஏற்றுமதி, எரிசக்தி விலை உயர்வு குறித்து விவாதம்

  • October 15, 2026
  • 0 Comments

சீனாவிலிருந்து அதிகரித்துவரும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துதல், அதிகளவில் உயர்ந்துள்ள எரிசக்தி விலைகளைக் குறைத்தல் மற்றும் எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய வரவுசெலவுத் திட்டம் தொடர்பான வேறுபாடுகளைக் களைதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Hybrid ரக கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஆணையம் பெய்ஜிங்குடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சில நாட்களிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப் […]

CJPக்கு வெளிநாட்டு நிதி உதவியா? அமெரிக்க பாடகியின் குற்றச்சாட்டால் பரபரப்பு இந்தியா செய்தி

CJPக்கு வெளிநாட்டு நிதி உதவியா? அமெரிக்க பாடகியின் குற்றச்சாட்டால் பரபரப்பு

  • October 15, 2026
  • 0 Comments

அபிஜித் தீப்கே என்பவரால் தொடங்கப்பட்ட ‘கரப்பான் ஜனதா கட்சி’ (CJP) க்கு வெளிநாட்டு நிதி கிடைப்பதாக அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் (Mary Millben) எழுப்பிய குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவில் குழப்பத்தை விளைவிக்கவும் அமெரிக்க நன்கொடையாளர்கள் சிலர் அபிஜித் தீப்கேவுக்கு நிதி உதவி அளித்து வருவதாக மேரி மில்பென் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள அபிஜித் தீப்கே, “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வெளிநாட்டினருக்கு யார் உரிமை […]

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்த விபத்தில், 13 வயதிற்கும் குறைவான 27 மாணவர்கள் , ஒரு ஆசிரியர் உட்பட குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் பாடசாலையில் ஏற்பட்ட கோர விபத்து: 27 மாணவர்கள் பலி

  • October 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்த விபத்தில், 13 வயதிற்கும் குறைவான 27 மாணவர்கள் , ஒரு ஆசிரியர் உட்பட குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் லேடி ரீடிங் மருத்துவமனைக்குக் (Lady Reading Hospital) கொண்டு வரப்பட்டபோதே உயிரிழந்திருந்ததாகவும், காயமடைந்த 20 பேர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிம் தெரிவித்துள்ளார். வடக்கு […]

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்ட செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கில் புதிய கைத்தொழிற் பேட்டைகள்: காணிகளை அடையாளம் காணும் பணி ஆரம்பம்

  • October 15, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிய கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கான காணிகளை அடையாளம் காணும் பணி மாவட்ட செயலர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை தொழில்துறை அபிவிருத்திச் சபையின் தலைவர் யசஸ் ஹேவகேவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் […]

விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ஸவின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை இன்று (15) மாலை வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை செய்தி

ஷிரந்தியின் உடல்நிலை எப்படி? மருத்து அறிக்கை இன்று கையளிப்பு

  • October 15, 2026
  • 0 Comments

விளக்கமறியல் உத்தரவின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஷிரந்தி ராஜபக்ஸவின் சுகாதார நிலைமை தொடர்பான மருத்துவ குழுவின் அறிக்கை இன்று (15) மாலை வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த குழுவில் 14 வைத்தியர்கள் உள்ளடங்குவதாக தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்தார். ஷிரந்தி ராஜபக்ஸவின் இருதயம் தொடர்பான நோய்கள் மற்றும் அது தொடர்பான சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவே குறித்த குழு நியமிக்கப்பட்டதாக அவர் கூறினார். 10 […]

“மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில்

  • October 15, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தங்கி இருந்து தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.”- என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். இருதய நோய் தீவிரமடைந்தாலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது என்றெல்லாம் தகவல் வெளியானது. மறுபுறத்தில் வழமையான மருத்துவ பரிசோதனைக்காகவே மஹிந்த சென்றார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் […]