மழைக்கு மத்தியிலும் தொடரும் பிக்குகளின் போராட்டம்
“ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து சாதகமான முடிவு கிட்டும்வரை இந்த இடத்தில் இருந்து நகரமாட்டோம்.” – என பௌத்த பிக்குகள் சூளுரைத்துள்ளனர்.
மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்னால் அமர்ந்து பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஜனாதிபதி செயலாளர் சம்பவ இடத்துக்கு வந்து மகாசங்கத்தினருடன் கலந்துரையாடினார்.
பிக்குகளின் கோரிக்கைகள் அடங்கி மனு அவரிடம் கையளிக்கப்பட்டது.
எனினும், இது தொடர்பில் பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதகமான முடிவு கிட்டும்வரை போராட போவதாக பிக்குகள் அறிவித்துள்ளனர்.




