உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் ஆதரவினால் ரஷ்யாவுக்கும், குறித்த ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

புடினின் அதிரடி முடிவால் ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி

  • October 16, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் ஆதரவினால் ரஷ்யாவுக்கும், குறித்த ஒன்றியத்துக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ், ஜெர்மன், சுவீடன் மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் நிறுவனங்களின் உள்ளூர் சொத்துக்களைத் தற்காலிக நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி விளாமிடிர் புடின் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில் பிரான்ஸ் தரையமைப்புத் தயாரிப்பு நிறுவனமான டார்கெட் (Tarkett), ஜெர்மன் பேக்கேஜிங் தயாரிப்பு நிறுவனமான மென்ஷென் (Menshen), சுவீடன் பேக்கேஜிங் நிறுவனமான […]

“இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே அமுலில் இருக்க வேண்டும். வடக்கில் திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவது தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கு வலிக்கின்றது.”- என்று ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார்: தேரர் நம்பிக்கை

  • October 16, 2026
  • 0 Comments

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புவதாக ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தெரிவித்தார். ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கடிதம் ஒன்றை கையளித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அமேலும் கூறியதாவது: “சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அத்தண்டனையை […]

வியாழக்கிழமை நடைபெற்ற FIFA நிர்வாகக் குழுவின் முக்கியமான கூட்டத்தில், தனது தீவிர விமர்சகர்களிடம் Gianni Infantino மன்னிப்பு கோரியுள்ளார். செய்தி விளையாட்டு

மன்னிப்பு கோரினார் FIFA தலைவர்: பதவி விலக வேண்டும் என்பதில் UEFA உறுதி

  • October 16, 2026
  • 0 Comments

வியாழக்கிழமை நடைபெற்ற FIFA நிர்வாகக் குழுவின் முக்கியமான கூட்டத்தில், தனது தீவிர விமர்சகர்களிடம் Gianni Infantino மன்னிப்பு கோரியுள்ளார். ஜூலை மாதத்தில் அவரே அறிமுகப்படுத்தி பின்னர் கைவிட்ட 4.2 பில்லியன் டாலர் உலகக்கோப்பை விற்பனை திட்டம் குறித்த எந்த ஆவணங்களும் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், உலகக்கோப்பையின் போது போலரின் பாலோகனுக்கு (Folarin Balogun) சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட வழக்கு மற்றும் அமெரிக்க தேசிய அணிக்கு உதவும் வகையில் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எவ்வாறு தலையிட்டார் என்பது […]

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா செய்தி

போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான் கானை நாடு கடத்துகிறது இந்தியா

  • October 16, 2026
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, நடிகர் இம்ரான் கான் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மும்பையில் அக்டோபர் 10-ம் திகதி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI) அட்டை பெற்றுள்ள நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். ஓசிஐ அட்டைதாரர்கள் இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்கவோ, நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ முடியாது. […]

கொழும்பு ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலகம் முன்னால் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

  • October 16, 2026
  • 0 Comments

கொழும்பு ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே இதற்குரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே பிக்குகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது. நேற்று மாலை ஆரம்பமான இப்போராட்டம் இன்று காலை 2ஆவது நாளாக தொடர்ந்த நிலையிலேயே […]

மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்கு கரையில் இஸ்ரேல் அத்துமீறல்: சீனா கடும் எதிர்ப்பு

  • October 16, 2026
  • 0 Comments

மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொள்ளும் கட்டாயக் குடியிருப்புகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக்கிடம் (Isaac Herzog) வலியுறுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்ற சந்திப்பின் போது ஹெர்ஸாக்கிடம் பேசிய வாங் யி, பாலஸ்தீனப் பிரச்சினை என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்று அநீதி என்பதில் […]

அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி

  • October 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஒரேகான் மாநிலத்தின் பெண்ட் (Bend) பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இறப்பு எண்ணிக்கை ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான் என்றும், இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அடையாளம் வெளிப்படுத்த விரும்பாத அதிகாரிகள் AP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். சட்ட அமுலாக்கப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள் காட்டி CNN மற்றும் CBS செய்திகள் வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறையில் ஒரு பெரியவரும் […]

“பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மஹிந்த ராஜபக்சவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

தள்ளாடும் வயதில் மஹிந்தவை பழிவாங்குவது ஏன்? மொட்டு கட்சி சீற்றம்

  • October 16, 2026
  • 0 Comments

“பிரபாகரனின் ஆன்மா சாந்தியடைவதற்காகவே மஹிந்த ராஜபக்சவை அவரது முதிய வயதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சித்திரவதை செய்து பழிவாங்குகின்றது. இதனால் தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: “மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். […]

யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யேமன் ஜனாதிபதி மாளிகைமீது ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல்: இருவர் பலி

  • October 15, 2026
  • 0 Comments

யேமனின் தெற்குப் பகுதியில் ஏடன் நகரில் உள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தைக் குறிவைத்து, வியாழக்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதிகள் ஐந்து ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மொஅம்மர் அல்-எரியானி தெரிவித்தார். எனினும், அங்கு தங்கியிருந்த யேமன் பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். ஏடனில் உள்ள […]

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் செய்தி

வெளிநாட்டு நிதி உதவி பெற சட்டங்களை திருத்தியது உக்ரைன்

  • October 15, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகிய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளை செயல்படுத்தும் வகையிலான சட்டமூலங்களுக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பில்லியன் கணக்கிலான வெளிநாட்டு நிதியுதவியை பெறுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் ஐந்தாவது ஆண்டாக தொடரும் நிலையில், பெரும் இராணுவச் செலவு, பொருளாதார மந்தநிலை மற்றும் உக்ரேனிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களால் ஏற்பட்ட உள்நாட்டு வருவாய் இழப்பு ஆகியவற்றால் உக்ரைன் கடும் வரவுசெலவுத் […]