பிரான்ஸ் ராஜதந்திரிகள் உரையாற்றுகையில் அமெரிக்க தூதுவர்கள் வெளிநடப்பு
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், பிரான்ஸ் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியதும், அமெரிக்க தூதுவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் (Volker Turk) நான்கு ஆண்டு கால பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு எதிராக வாஷிங்டன் வாக்களித்தது தொடர்பாக, அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளுக்கிடையே இணையத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்த வெளிநடப்பு நடந்துள்ளது. ஜெனீவாவில் உள்ள பிரான்ஸின் ஐ.நா. தூதரகம் சனிக்கிழமையன்று வெளியிட்ட பதிவில், […]













