இலங்கை செய்தி

வெளிநாட்டு ஜோடிக்கு சைவநெறி முறைப்படி திருகோணமலையில் திருமணம்

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

செக் குடியரசைச் சேர்ந்த இருவர் , திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் இன்று (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

திருகோணமலை சாம்பல்தீவு பாம் பீச் ரிசோட் விடுதியில் வைத்து யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் முன்னிலையில் மைக்கல் என்பவரும், சன்ரா என்பவரும் இன்று (25) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.

இதன்போது ஒருவரை ஒருவர் இறுதி மூச்சு வரை இன்பத்திலும் துன்பத்திலும் அன்பு செய்து வாழ்வோம் என்று உறுதிகூறி குருவால் வழங்கப்பட்ட உருத்திராக்கம் மணி மாலையை தாலிக்குப் பதிலாக அணிவித்துக் கொண்டனர். இதன்போது குருவினால் மாப்பிளைக்கும் பெண்பிள்ளைக்கும் சிவலிங்கம் ஒன்று வழங்கப்பட்டது.

யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதன் அவர்களினால் இந்த விடுதியில் வைத்து வெளிநாட்டவருக்கு சைவநெறிப்படி நடத்தி வைக்கப்பட்ட 10 ஆவது திருமண பந்தம் இதுவாகும். குறித்த விடுதியின் உரிமையாளரான மறெக் நெமெக் செக் குடியரசு பிரஜை ஆவார்.

அவர் யோகக் கலையை பயில்வதற்காக திருக்கோணமலையிலுள்ள யோகாசன குருவான சிவதிரு. கலியுகவரதனின் நண்பரானார். அவர் சைவ நெறிமுறையுடனான வாழ்வு பற்றி நாட்டம் கொண்டிருந்தார்.

இந் நிலையில் தனது நாட்டு பிரஜைகளுக்கு சைவநெறிமுறையுடனான திருமண பந்தத்தை தனது விடுதியில் வைத்து சிவதிரு கலியுகவரதன் மூலமாக திருமணபந்தத்தில் இணைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை