விக்டோரியா மாநில பிரீமியர் ராஜினாமா
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநில பிரீமியர் (Premier) ஜெசிந்தா ஆலன் (Jacinta Allan) பதவி விலகியுள்ளார்.
இது துணை பிரீமியர் பென் கரோல் (Ben Carroll) மாநிலத்தின் அடுத்த தலைவராவதற்கு வழிவகுத்துள்ளது.
இன்று காலை, தான் தோல்வியடைக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்புத் தீர்மானத்திற்கு முன்னதாக ஆலன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேவேளையில், தலைமைப் போட்டிக்கு வருமாறு தொழிலாளர் கட்சியினர் தன்னை அணுகியதாக கரோல் தெரிவித்திருந்தார்.
டேனியல் ஆண்ட்ரூஸைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு முதல் விக்டோரியாவின் பிரீமியராக ஆலன் பதவி வகித்து வருகிறார்.
ஆண்ட்ரூஸ் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்த பல சர்ச்சைகள் இவரது பதவிக்காலத்தையும் நிழலாடின. குறிப்பாக, மாநிலத்தின் ‘பிக் பில்ட்’ (Big Build) கட்டுமானத் திட்டத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் இதில் குறிப்பிடத்தக்கவை.
ஆலன், விக்டோரிய மாநிலத்தின் மிக இளைய பெண் நாடாளுமன்ற உறுப்பினராவார். மேலும், முதலமைச்சர் பதவியை வகித்த இரண்டாவது பெண்மணி இவரே ஆவார்.




