22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சங்கம் என்பன உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சட்டமா அதிபர் எதிர்வாதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் செய்யப்படும் எந்தவொரு திருத்தமும், நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வு மற்றும் மக்களின் உரிமைகள் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் அடிப்படையில் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் […]













