உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வடகொரியாவுடன் நேரடி ராஜதந்திர தொடர்பை பேண ட்ரம்ப் வியூகம்

Trump says North Korea's Kim has responded to his overtures

தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது தொடர்புகளுக்குப் பதிலளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில் கிம்முடன் சந்திப்புகளை நடத்தி, கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதுடன் ஒப்பிடுகையில், அவரது தற்போதைய ஆட்சிக் காலத்தில் இந்த உறவுக்குக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும், வடகொரிய ஜனாதிபதியுடன் நேரடி இராஜதந்திர உறவை மீண்டும் தொடங்குவதில் அமெரிக்க ஜனாதிபதி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.

தொடர்புகொள்வதற்கான தனது முயற்சிகளுக்கு கிம் ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை என்று ஓவல் அலுவலகத்தில் (Oval Office) செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “அவர் பதிலளித்துவிட்டார்” என்று டிரம்ப் கூறினார்.

ஆனால், அதுகுறித்த கூடுதல் விவரங்களை டிரம்ப்வெளியிடவில்லை.

தனது நீண்டகால ஆசிய நட்பு நாடான தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு இராணுவப் பயிற்சிகளைப் “பெருளவில் குறைக்குமாறு” டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பென்டகனுக்கு (Pentagon) உத்தரவிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி