22 ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் நீதி அமைச்சரால், முதலாம் வாசிப்புக்கென மேற்படி இரு சட்டமூலங்களும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.
இச்சட்டமூலங்கள் தொடர்பில் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் அதற்கு எதிராக உயர்நீதிம்னறத்தில் மனுக்களை தாக்கல் செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.
அதேவேளை, இவ்விரு சட்டமூலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.




