இந்தியா உலகம் செய்தி

இந்தியா, தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி இன்று ஆரம்பம்

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது.

இந்தியா மற்​றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் ராணுவத்​தினர் இணைந்து மேற்​கொள்​ளும் 15-ஆவது ‘மைத்​ரீ’ கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் இன்று ( 18) ஆரம்பமாகி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை வரை நடை​பெறுகிறது.

இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​ப​தற்​காக 85 வீரர்​களைக் கொண்ட இந்​திய ராணுவத்​தின் படைப்​பிரிவு நேற்று தாய்​லாந்து புறப்பட்டுச் சென்​றது.

இந்​திய ராணுவத்​தின் சார்​பில் 9-வது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்​பிரி​வின் வீரர்​களும், தாய்​லாந்து ராணுவத்​தின் சார்​பில் 3-ஆவது பட்​டா​லியன் வீரர்​களும் இதில் பங்கேற்​கின்​றனர்.

இரு நாடு​களின் படைகளும் தங்​கள் செயல்​பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்​து​கொள்​வதுடன், நவீன ராணுவ உபகரணங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​களை​யும் இந்​தக் கூட்​டுப் பயிற்​சி​யின் போது காட்​சிப்​படுத்​தவுள்​ளன.

கடந்த 2006-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட இந்த ‘மைத்​ரீ’ ராணுவப் பயிற்​சி, இரு நாட்டு ராணுவப் படைகளுக்கு இடையே சிறந்த நடை​முறை​களைப் பகிர்ந்​து​கொள்​ள​வும், பரஸ்பர புரிதலை அதி​கரிக்​க​வும் வழிவகுத்துள்​ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி