செய்தி

திருச்செந்தூரைத் தொடர்ந்து சீரடி செல்லும் விஜய்..

  • April 28, 2026
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். இதன்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. முதன்முறையாக இந்த தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். […]

செய்தி

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகங்களில் கடும் கட்டுப்பாடு வரலாம்

  • April 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகப் பயன்பாட்டில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கல்வித்துறை செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் தெரிவித்துள்ளார். எனினும், முழுமையான தடை குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பிரபுக்கள் சபையுடன் ஏற்பட்ட விவாதத்திற்குப் பின்னர், 16 வயதுக்குட்பட்டோருக்கு வயது வரம்பு அல்லது பயன்பாட்டு கட்டுப்பாடுகள் கொண்டு வர அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இதுதொடர்பில் அரசாங்கம் தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் இந்த கட்டுப்பாடுகள் பயனுள்ளதாகவும் […]

செய்தி

ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்

  • April 28, 2026
  • 0 Comments

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார். குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் […]

செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் முரண்பாடு காணப்படுவதாக கன்சர்வேடிவ் குற்றச்சாட்டு

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பில் முரண்பாடுகள் காணப்படுவதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party)  தலைவர் கெமி படேனொக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) நாடாளுமன்றத்தை பலமுறை தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும், தற்போது தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கான பல்வேறு கதைகளை கூறி வருகிறார் என்றும் அவர் குற்றம் சுமத்தினார் ஸ்டார்மரை சிறப்புரிமை குழு (Privileges Committee) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு  ஆதரவாக வாக்களிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார். மேலும், […]

செய்தி

போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது அருவருப்பானது – பிரதமர்

  • April 27, 2026
  • 0 Comments

போதைப்பொருட்களை முழுமையாக தடை செய்வதை விட அவற்றை சட்டபூர்வமாக்கி அரசின் கட்டுப்பாட்டில் ஒழுங்குபடுத்த வேண்டும் என பசுமைக் கட்சி தலைவர் சாக் போலான்ஸ்கி (Zack Polanski)தெரிவித்துள்ளார். போதைப்பொருளால் ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில் அதிக இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். ஆகவே ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போதைய தடுப்பு கொள்கை தோல்வியடைந்துள்ளதாக கூறிய அவர் கடுமையான போதைப்பொருட்கள் மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஞ்சா போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் அனுமதிக்கப்படலாம் […]

செய்தி

ஸ்டார்மர் மீது விசாரணை நடத்தலாமா? நாளை வாக்கெடுப்பு

  • April 27, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் (Keir Starmer) காமன்ஸ் சபையை தவறாக வழிநடத்தியாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் இன்று (Sir Lindsay Hoyle) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விவாதம் நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டேல்சன் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோக் […]

செய்தி

புதுச்சேரியில் பாடசாலைகளில் இந்தி திணிப்பிற்கு திமுக மற்றும் அதிகமுக எதிர்ப்பு

  • April 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி சேர்க்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடசாலைகளில் 2026 – 27 ஆம் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பாடசாலைளுக்கு […]

செய்தி

தையிட்டியில் தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கஜேந்திரகுமார் அவசர கடிதம்

  • April 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ். மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். இந்தக் காணிகளை நாளைய தினம் அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளருக்கு அவர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 17 வருடங்களாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராடி வரும் நிலையில், காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பாதுகாப்பு அமைச்சர்

  • April 27, 2026
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார். இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் […]