இலங்கை செய்தி

போதைப்பொருளுடன் கைதான பிக்குகள் : சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பாதுகாப்பு அமைச்சர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதான பிக்குகள் தொடர்பில் விசாரணைகள்

ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என கூறிய அவர் பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு

ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது தொடர்பாக மேலதிக ந

டவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் செயற்படும் அதேவேளை,  சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த  விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!