ரஷ்ய பயணத்தின் மூலம் உலகுக்கு செய்தி சொன்ன ஈரான்
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஆரக்சியின் (Araghchi) ரஷ்யப் பயணம், அமெரிக்கா கூறுவது போல ஈரான் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உலகிற்கு காட்டும் முயற்சியென அரசியல் ஆய்வாளர் முகமது எல்மாஸ்ரி (Mohamed Elmasry) தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் வெறும் அடையாளப்பூர்வமான ராஜதந்திர நடவடிக்கை மட்டுமல்ல என கூறிய அவர் அதற்கு அப்பாற்பட்ட முக்கிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருக்கலாம் என்று அவர் கூறினார்.
குறிப்பாக, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கான மாற்று தரைவழிப் பாதைகள், எண்ணெய் சேமிப்பு நெருக்கடி, எதிர்கால பேச்சுவார்த்தை நிபந்தனைகள் மற்றும் இறுதி தீர்வு தொடர்பாக ஆலோசனைகள் நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும் இரு நாடுகளும் விவாதித்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் மூலம், ஈரானுக்கு இன்னும் நண்பர்கள் உள்ளனர் என்பதையும், நாடு தனிமையில் இல்லை என்பதையும் காண்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.





