லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்
கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் (Australia Institute) சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் திட்ட பணிப்பாளர் எம்மா ஷார்டிஸ் (Emma Shortis) தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் போர் நிறுத்தத்தை மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாகவும், லெபனானில் தாக்குதல் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு (Israel) தடை விதிக்கப்பட்டதாக கூறியிருந்தாலும், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் வலதுசாரி அரசியல் அழுத்தங்களின் காரணமாக நெதன்யாகு தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் என்றும் ஆய்வாளர் Emma Shortis மேலும் கூறினார்.





