புதுச்சேரியில் பாடசாலைகளில் இந்தி திணிப்பிற்கு திமுக மற்றும் அதிகமுக எதிர்ப்பு
இந்தியாவின் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையில் இந்தி சேர்க்கப்படுவதற்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.
அதேபோன்று அதிமுகவும் இரு மொழி கொள்கைக்கே ஆதரவு தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடசாலைகளில் 2026 – 27 ஆம் கல்வியாண்டு முதல், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆவது மொழியைக் கட்டாயமாக்கும் புதிய அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, ‘தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023’ இன் பரிந்துரைகளை அமல்படுத்த உள்ளனர்.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்த பாடசாலைளுக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.





