உலகம்

HIV தொற்று – ஃபிஜியில் தேசிய நெருக்கடி நிலை

  • September 17, 2026
  • 0 Comments

எய்ட்ஸ் தொற்றுநோயை  ஃபிஜி  அரசாங்கம் தேசிய நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு   எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 27 சதவீதத்தினால் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே மட்டுமே காணப்பட்ட இந்தப் பாதிப்பு, தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அங்குள்ள 60 பெரியவர்களில் ஒருவர் இந்நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் […]

உலகம்

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் HIV தொற்று – ஐ.நா கவலை

  • July 28, 2026
  • 0 Comments

HIV தொற்றுக்கான நிதியுதவிய ட்ரம்ப் குறைத்துள்ள  நிலையில் அந்நோய் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஐ.நா. அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. “சர்வதேச சமூகம், எச்.ஐ.வி-க்கு எதிராகப் பல தசாப்தங்களாகக் கடினமாகப் பெற்ற வெற்றிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் நிதிப் புரட்சிக் காலத்திற்குள் நுழைந்துள்ளதாக யுஎன்எய்ட்ஸ் (UNAIDS) குறிப்பிட்டுள்ளது. பிரேசிலில் நடைபெறும் மாநாட்டின் தொடக்கத்தில் 60 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டு இந்த தகவல் வெளியிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் நிதி […]

இலங்கை

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் HIV தொற்று

  • July 2, 2026
  • 0 Comments

இளம் பருவத்தினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர்,  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளதாக   சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். சிலர் தங்களுக்கு தெரியாமலேயே இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.