உலகளாவிய அச்சுறுத்தலாக மாறும் HIV தொற்று – ஐ.நா கவலை
HIV தொற்றுக்கான நிதியுதவிய ட்ரம்ப் குறைத்துள்ள நிலையில் அந்நோய் தொற்று தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஐ.நா. அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
“சர்வதேச சமூகம், எச்.ஐ.வி-க்கு எதிராகப் பல தசாப்தங்களாகக் கடினமாகப் பெற்ற வெற்றிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு ஆழமான அரசியல் மற்றும் நிதிப் புரட்சிக் காலத்திற்குள் நுழைந்துள்ளதாக யுஎன்எய்ட்ஸ் (UNAIDS) குறிப்பிட்டுள்ளது.
பிரேசிலில் நடைபெறும் மாநாட்டின் தொடக்கத்தில் 60 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டு இந்த தகவல் வெளியிட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு 18 சதவீத் குறைந்து $7.3 பில்லியனாக ஆனது. ஆனது, இது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது கடந்த 30 ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸை ஒழிக்கும் உலகளாவிய இலக்கு தடம் புரண்டுவிட்டது என்றும், குறைக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் எபோலா போன்ற பிற நெருக்கடிகள் முயற்சிகளைத் தடுக்கின்றன என்றும் அந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.
மேலும் கடந்த ஆண்டில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




