உலகம்

HIV தொற்று – ஃபிஜியில் தேசிய நெருக்கடி நிலை

எய்ட்ஸ் தொற்றுநோயை  ஃபிஜி  அரசாங்கம் தேசிய நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு   எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 27 சதவீதத்தினால் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பு ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே மட்டுமே காணப்பட்ட இந்தப் பாதிப்பு, தற்போது நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் 2,016 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அங்குள்ள 60 பெரியவர்களில் ஒருவர் இந்நோயுடன் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு 59 குழந்தைகள் எச்.ஐ.வி பாதிப்புடன் பிறந்ததாகவும், அவர்களில் 18 பேர் தங்கள் முதல் பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலவச, தன்னார்வ மற்றும் ரகசியப் பரிசோதனை வசதிகள், தடுப்பு மருந்துகள், ஊசி மூலம் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான பாதிப்பு குறைப்பு சேவைகள் மற்றும் சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்