உலகம்

ஹன்டா வைரஸ் பரவல் : தனிமைப்படுத்தல் காலத்தை நீட்டித்தது ஆஸ்திரேலியா!

  • May 28, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, எம்வி ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு பேருக்கான தனிமைப்படுத்தல் காலத்தை ஆஸ்திரேலியா அரசாங்கம் நீட்டித்துள்ளது. பெர்த் அருகே உள்ள ஒரு மையத்தில், அவர்கள் 42 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை தனிமைப்படுத்தலில் உள்ள ஆறுபேரும் நலமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதிப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டேவுக்குச் சென்ற எம்வி ஹோண்டியஸ் கப்பலில் […]

உலகம்

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கிருமி நீக்கம் செய்வதற்காக ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று நங்கூரமிடப்படவுள்ளது. கப்பலில் தங்கியிருக்கும் 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளை டச்சு அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 150 பேருடன் பயணத்தை ஆரம்பித்த அந்த கப்பலில் மே மாதம் 02 ஆம் திகதியன்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்றினால் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பிரான்ஸ், பிரித்தானியா, கனடாக […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் பிரஜைக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு : தனிமைப்படுத்தலுக்கு உத்தரவு!

  • May 11, 2026
  • 0 Comments

எம்.வி. ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் பயணித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் இருந்து அவரை பிரான்ஸிற்கு அழைத்துவர வாடகை விமானம் ஒன்று அனுப்பட்ட நிலையில், விமானத்தில் வைத்து  அவருக்கு தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதாக பிரெஞ்சு பிரதமர் தெரிவித்துள்ளார். அதனால் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐந்து பேரும் “மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாகக் கடுமையான தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை குறித்த […]

உலகம்

 ஹன்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலால் 03 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருவருக்கு பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே குறித்த சொகுசு கப்பலில் 140இற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்களில் 34 பேர் ஏற்கனவே கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நான்கு பேர் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில்  மருத்துவமனைகளில் சிகிச்சை […]