ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை!
ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் என்ற சொகுசுக் கப்பல், கிருமி நீக்கம் செய்வதற்காக ரோட்டர்டாமில் (Rotterdam) இன்று நங்கூரமிடப்படவுள்ளது.
கப்பலில் தங்கியிருக்கும் 25 பணியாளர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் ஏற்பாடுகளை டச்சு அதிகாரிகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
150 பேருடன் பயணத்தை ஆரம்பித்த அந்த கப்பலில் மே மாதம் 02 ஆம் திகதியன்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த தொற்றினால் இதுவரை 03 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பிரான்ஸ், பிரித்தானியா, கனடாக உள்ளிட்ட சில நாடுகளும் தொற்று பாதிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் கப்பலில் பயணித்தவர்களை 42 நாள் தனிமைப்படுத்தலில் வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




