ஹன்டா வைரஸ் தொற்றால் 08 பேர் பாதிப்பு!
ஹன்டா வைரஸ் பரவலால் 03 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனைகளில் 06 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இருவருக்கு பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குறித்த சொகுசு கப்பலில் 140இற்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் அவர்களில் 34 பேர் ஏற்கனவே கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் நான்கு பேர் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பயணிகளை இனங்காணும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொறித்துண்ணிகள் மூலம் பரவும் இவ் வைரஸானது கொவிட் தொற்றைபோல மற்றொரு சமூக தொற்றாக உருவெடுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




