பிரான்சின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்
பிரான்சின் முக்கிய பல்பொருள் அங்காடிகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவ் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் உருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், சுமார் 150-200 இன்டர்மார்ச் கடைகளும், கிட்டத்தட்ட 100 கோஆபரேட்டிவ் யூ Cooperative U விற்பனை நிலையங்களும் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் மேலும் சில கடைகளும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அவற்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




