ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ – தேசிய அவசரநிலை பிறப்பிப்பு
ஸ்பெயினில் நேற்று இரவு முதல் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் மற்றும் அதன் அண்டை மாகாணமான அவிலாவிற்கு அருகில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த அவசரநிலை பிரகடனமானது, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தீ விபத்துகள், மோசமான வானிலை, மற்றும் பல்வேறு பொது நிர்வாகங்களிடமிருந்து விரிவான […]






