“போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரைக் கைது செய்து, தமிழ் பிரிவினைவாத டயஸ்போராவைத் திருப்திப்படுத்தும் செயலை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே ஷிரந்தி ராஜபக்ச கைது”

  • October 8, 2026
  • 0 Comments

“போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஆகியோரைக் கைது செய்து, தமிழ் பிரிவினைவாத டயஸ்போராவைத் திருப்திப்படுத்தும் செயலை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ‘மொட்டு’ கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது: “முஸ்லிம் அடிப்படைவாதிகள் குறித்து ஞானசார தேரரே முதன்முதலில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அன்று அவர் கூறியதைச் செவிமடுத்து, […]

கலகொட அத்தே ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது குறித்து கவலை தெரிவித்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நான்கு முக்கிய நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு சாதாரண உடை: மகாநாயக்க தேரர்கள் கவலை

  • October 8, 2026
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரரை சாதாரண உடையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது குறித்து கவலை தெரிவித்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நான்கு முக்கிய நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். துறவியின் ஆடையை அகற்றும் முடிவு தங்களுக்குக் கவலையையும் ஆச்சரியத்தையும் அளிப்பதாக மகாநாயக்க தேரர்கள் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர். மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரககொட சிறி ஞானரதன தேரர், அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்கர் கரகொட-உயங்கொட மைத்ரி […]

17,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் திருடப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு வந்த NudeLeaksTeens என்ற இணையதளத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 21 மற்றும் 25 வயதுடைய சகோதரர்கள் இருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி

17,000 பெண்களின் ஆபாசப் படங்களை விற்ற இணையதளம் முடக்கம்: சகோதரர்கள் கைது

  • October 7, 2026
  • 0 Comments

17,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் திருடப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு வந்த NudeLeaksTeens என்ற இணையதளத்தை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 21 மற்றும் 25 வயதுடைய சகோதரர்கள் இருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு பிரான்ஸில் வைத்து குறித்த இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் போது பிட்காயின், எத்தேரியம், லைட்காயின் மற்றும் USDT போன்ற கிரிப்டோகரன்சி வடிவங்களிலிருந்த 700,000 யூரோ ($782,530) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்களைப் பிரான்ஸ் புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர். […]

வெளிநாட்டு உளவு அமைப்பிற்காக இரகசிய ஆவணங்களை விலைக்கு வாங்கி பகுப்பாய்வு செய்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு எதிராக அந்நாட்டின் கூட்டாட்சி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தியோகபூர்வ கைது பிடியாணையை பிறப்பித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பனிப்போருக்கு பிறகு ஜெர்மனியில் மிகப்பெரிய சர்ச்சை: முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது

  • October 7, 2026
  • 0 Comments

வெளிநாட்டு உளவு அமைப்பிற்காக இரகசிய ஆவணங்களை விலைக்கு வாங்கி பகுப்பாய்வு செய்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு எதிராக அந்நாட்டின் கூட்டாட்சி உச்சநீதிமன்ற நீதிபதி உத்தியோகபூர்வ கைது பிடியாணையை பிறப்பித்துள்ளார். உளவு பார்த்தல் மற்றும் தேசத்துரோக முயற்சி சந்தேகத்தின் பேரில் 80 வயதான ஆகஸ்ட் ஹேனிங் (August Hanning) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம், ஜெர்மன் உளவுத்துறையினரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பனிப்போரின் முடிவுக்குப் பிறகு ஜெர்மனியில் இடம்பெற்ற மிகப்பாரிய இரகசிய […]

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச , கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

  • October 7, 2026
  • 0 Comments

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச , கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்த பின்னர், புதன்கிழமை (7) காலை CIABOC அதிகாரிகளால் ஷிரந்தி ராஜபக்சஷ கைது செய்யப்பட்டார். அரசு வங்கி ஒன்றிலிருந்து ரூ. 10 மில்லியனை பெற்றுத் தவறாகப் பயன்படுத்தியமை, அதன்மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் […]

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், இந்திய மத்திய வங்கி (RBI) புதன்கிழமை தனது முக்கிய வட்டி விகிதமான 'ரிப்போ விகிதத்தை' (Repo Rate) 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியது. இந்தியா செய்தி

4 வருடங்களுக்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியது இந்திய மத்திய வங்கி

  • October 7, 2026
  • 0 Comments

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில், இந்திய மத்திய வங்கி (RBI) புதன்கிழமை தனது முக்கிய வட்டி விகிதமான ‘ரிப்போ விகிதத்தை’ (Repo Rate) 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியது. இதன் மூலம் வட்டி விகிதம் 5.5% ஆக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் மத்திய வங்கி மேற்கொள்ளும் முதல் வட்டி விகித உயர்வாகும். தனது பணவியல் கொள்கை நிலையை “நடுநிலை” (neutral) என்ற நிலையிலிருந்து “கணிப்பீட்டு இறுக்கம்” (calibrated […]

2026-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, அறிவியலாளர்கள் ஹென்றி பி. காகன் (Henri B. Kagan) மற்றும் கென்சோ சோய் (Kenso Soai) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் செய்தி

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

  • October 7, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, அறிவியலாளர்கள் ஹென்றி பி. காகன் (Henri B. Kagan) மற்றும் கென்சோ சோய் (Kenso Soai) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில் ‘நேரியல் அல்லாத விளைவுகள்’ (non-linear effects) மற்றும் ‘சுய-வினையூக்கம்’ (autocatalysis) ஆகியவற்றைத் தன்னிச்சையான ஹோமோகைராலிட்டி (spontaneous homochirality) தீர்வுகளின் மூலம் கண்டறிந்ததற்காக இந்த உயரிய விருது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகியோர் […]

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நாமல் கோரிக்கை

  • October 7, 2026
  • 0 Comments

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குறித்த தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபிய அரசரிடம் மன்னிப்பு கோரும் ஜனாதிபதி, ஞானசார தேரருக்கு இங்கு மன்னிப்பு வழங்கி முன்னுதாரணத்தை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். […]

முன்னாள் அமைச்சர் றோகித பொகொல்லாகம இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித பொகொல்லாகம கைது

  • October 7, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் றோகித பொகொல்லாகம இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, பொகொல்லாகம இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் றோகித போகொல்லாகம கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இலங்கை செய்தி

இந்திய எதிர்க்கட்சி தலைவர்மீது வழக்குப் பதிவு

  • October 7, 2026
  • 0 Comments

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது ஆகாஷ்வாணி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​க வலியுறுத்தி இண்டியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்ற பேரணி டெல்லியில் நேற்று நடைபெற்றது. மக்​களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி, காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்​தி, […]