ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பு பொறிமுறையை குழப்பும் அமெரிக்கா

  • July 13, 2026
  • 0 Comments

ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த உடன்படிக்கையை எட்டுவதில் சிக்கல்கள் நீடிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baghaeiதெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் தாங்கள் பின்பற்றப்போவதில்லை என்றும் Esmaeil Baghaei எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த […]

'மை பிரில்லியன்ட் கரியர்' (My Brilliant Career) மற்றும் 'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), தனது 78 ஆவது வயதில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

‘ஜுராசிக் பார்க்’ நாயகன் சாம் நெய்ல் காலமானார்

  • July 13, 2026
  • 0 Comments

‘மை பிரில்லியன்ட் கரியர்’ (My Brilliant Career) மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ (Jurassic Park) ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), தனது 78 ஆவது வயதில் காலமானார். ஆஸ்திரேலியா, சிட்னியில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார். நெய்ல் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லீப்பிங் டாக்ஸ்’ (Sleeping Dogs) திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து மை பிரில்லியன்ட் கரியர், ஜுராசிக் பார்க், தி பியானோ (The Piano), தி […]

“ நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தேசிய பாதுகாப்பு என்பது உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார். செய்தி

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

  • July 13, 2026
  • 0 Comments

“ நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தேசிய பாதுகாப்பு என்பது உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த நாள் முதலே தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சிற்சில சம்பவங்கள் இடம்பெற்றன. […]

குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ இலக்குகள்மீது தாக்குதல் தொடரும்: ஈரான் அறிவிப்பு

  • July 13, 2026
  • 0 Comments

ஈரானின் அதிகாரப்பூர்வ ‘இர்னா’ (IRNA) செய்தி முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைகளின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை அமைப்புகள், பதுங்கு குழிகள் மற்றும் ஆதரவு தங்குமிடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து, இராணுவம் “அழிவுகரமான ட்ரோன்” தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள இராணுவ தளங்கள், சிவிலியன் உட்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களுக்குத் […]

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். செய்தி பொழுதுபோக்கு

“மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை”

  • July 13, 2026
  • 0 Comments

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும் அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், வாசகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1947-ல் ஆண்டிபட்டியில் அவர் பிறந்தார். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதி உள்ளார். வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், […]

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. செய்தி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்க புதிய திட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

அனைத்து நீதிபதிகளுக்கும் ஓய்வுபெறும் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் காலத்தை நீடிக்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில், அனைத்து நீதிபதிகளினதும் ஓய்வுபெறும் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதிபதிகள் பற்றாக்குறை மற்றும் வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, முன்னர் முன்மொழியப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் கூடுதலாக, நீதிவான் நீதிமன்ற, […]

இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஒக்டோபர் 27 நெதன்யாவுக்கு பலப்பரீட்சை

  • July 13, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பாரம்பரியத்தையும், அவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு முக்கிய வாக்கெடுப்பாக அமையவிருக்கும் பொதுத்தேர்தல், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டின் (Knesset) நான்கு ஆண்டுகாலப் பதவிக்காலம் இந்த வாரம் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பூர்வமாக தேர்தலை நடத்தக்கூடிய கடைசி வாய்ப்பாக இந்த ஒக்டோபர் 27ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வரலாற்றில் கடந்த […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 13, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிரணிகள் தீர்மானித்துள்ளன. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். “ நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எமது […]

ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

உலகக் கோப்பை வரலாற்றில் புதிய புரட்சிக்கு தயாராகும் FIFA

  • July 13, 2026
  • 0 Comments

ஆண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை 64 அணிகள் பங்கேற்கும் தொடராக விரிவுபடுத்துவது குறித்த திட்டங்கள் தற்போதைய 2026 தொடருக்குப் பிறகு பரிசீலிக்கப்பட உள்ளதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரானது முழு உலகிற்குமானதாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கான இந்த முன்மொழிவு கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்டது. தற்போது 48 அணிகளுடன் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடரின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, […]

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

06 தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு: இன்று கொழும்பில் நிகழ்வு

  • July 13, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (13) கொழும்பில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின் பின்னர் இதன் நோக்கம் பற்றி தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை ஆளும் மற்றும் எதிரணிகளிடம் கொண்டுசெல்வதற்கு பொதுமேடையொன்று அவசியம். அதற்கான முயற்சியாக இது அமையும் எனவும் மனோ […]