ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டம்
ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டு உள்ளது.
ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் உலகின் வலிமையான, அதிநவீன ஏவுகணையாக கருதப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ரூ.51,838 கோடியில் (இந்திய நாணய மதிப்பு) ஐந்து எஸ் – 400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.
இதன்படி மூன்று ஏவுகணைகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. மீதமுள்ள இரு ஏவுகணை வரும் நவம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ரஷ்யாவின் எஸ் – 400 ஏவுகணைகள் மிக முக்கிய பங்கு வகித்தன.
இதைத் தொடர்ந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் ரஷ்யாவிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை தீவிரமாக பரிசீலித்து வருவதாக ரஷ்ய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.




