யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]













