உலகம் செய்தி

அமெரிக்க – ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம்?

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
Iranian Interior Minister Eskandar Momeni, left, meets with his Pakistani counterpart, Mohsin Naqvi, right at Nur Khan airbase in Rawalpindi, Pakistan

ஈரானிய உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியின் (Eskandar Momeni) இஸ்லாமாபாத் விஜயம், முக்கியமாக இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தகத்தை மையமாகக் கொண்டுள்ளடது என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் (Syed Asim Munir) ஆகியோரையும் மொமேனி, சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே, இந்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளையும் தாண்டி, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து விரிவாக ஆராயும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் பிராந்தியப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் என பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் மோசின் ரஸா நக்வி (Mohsin Raza Naqvi) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போரை தற்காலிகமாக நிறுத்திய ‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்’ (Islamabad Memorandum of Understanding) டெஹ்ரானும் வஷிங்டனும் கையெழுத்திட உதவியதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி