இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணி வந்தது ஐரோப்பியக்குழு: நீதி கோரி மக்கள் போராட்டம்

  • July 22, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்று (22) புதன்கிழமை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியினை பார்வையிடுவதற்காக , ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்த நிலையில் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாக செம்மணி வளைவு பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போரட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், […]

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை செய்தி

மலையகத்தில் ஆட்டோ விபத்து: இருவர் பலி – மூவர் படுகாயம்

  • July 22, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு வயோதிபர்களே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரு பாடசாலை மாணவர்களும், ஆட்டோ சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகி ஆட்டோ பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்ச் செலவு 37.5 பில்லியன் டொலர்களாக உயர்வு

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். தீவிர குண்டுவீச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போருக்கான அவசர நிதியைக் கோரி, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தலைவர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் […]

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

பிரிட்டன் தூதுவரை சந்தித்தார் ஜீவன் எம்.பி.

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை (Andrew Patrick) , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பிரித்தானிய துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களும் கலந்துகொண்டார். இதன்போது, மலையக மக்கக்கான காணி உரிமை, அவர்களுக்கான பிரித்தானியாவின் உதவிகள், ‘டிட்வா’ புயல் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக நிலவிவரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன. பிரித்தானியத் தூதுவர் குழுவின் […]

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை (22) காலை 09 மணிக்குச் செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரில் சென்று பார்வையிடவுள்ளனர். இலங்கை செய்தி

செம்மணி மனிதப் புதைகுழியை இன்று நேரில் பார்வையிடுகின்றனர் ஐரோப்பிய தூதுவர்கள்

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய 8 பேர் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி மனிதப் புதைகுழியை இன்று புதன்கிழமை நேரில் பார்வையிடவுள்ளனர். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், அன்றைய […]

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். இலங்கை செய்தி

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?

  • July 21, 2026
  • 0 Comments

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இவ்விடயம் […]

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 13 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • July 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39ஆவது நாளான இன்று 13 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகும். இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 93 நாட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரையில் 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 444 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.  

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: அரசின் நிலைப்பாடு அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கையளிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியதாவது: “கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முயன்றன. […]

" போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் 'இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக' இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் மீண்டும் போர் ஏற்படாது: ஐரோப்பிய தூதுக்குழுவிடம் ஆளுநர் சுட்டிக்காட்டு

  • July 21, 2026
  • 0 Comments

” போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும்.” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வு

  • July 21, 2026
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின […]