ஹமாஸ் தளபதி காசாவில் சுட்டுக் கொலை: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு
Adham Ibrahim Shaban Nasman
காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் காசா நகரப் பிரிவின் செயல்பாட்டுத் துறைத் தலைவரான அதாம் இப்ராஹிம் ஷாபான் நாஸ்மன் (Adham Ibrahim Shaban Nasman) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஷின் பெட் (Shin Bet) உளவு அமைப்புடன் இணைந்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நாஸ்மன், அங்கிருந்து பலரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அவர் ஹமாஸ் அமைப்பின் ‘நுக்பா’ (Nukhba) சிறப்புப் படைப்பிரிவின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.





