இலங்கை செய்தி

சர்வதேச விசாரணைகோரி செம்மணியில் நாளை போராட்டம்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் செம்மணியில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக் கோரியே, நாளை காலை 8 மணிக்குச் செம்மணியில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை