நேர்மையான அணுமுறைமூலமே தமிழர்களின் ஆதரவை பெற்றார் ஜனாதிபதி அநுர
13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் […]













