கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பிரிட்டன் ஆராய்வு!
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் ( Bridget Phillipson) சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர். அத்தோடு, இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றம் (Student mobility), […]













