இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாவுக்கு மேல் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்படி மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதலில் காயமடைந்த அதிகாரிகளுள் எழுவர் இன்னும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தடிகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

கலவர தினத்தன்று சமயல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த கத்திகள் மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து கைதிகள் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகள்மீது வீசுவதற்கு தேய்காய் உள்ளிட்டவற்றையும் எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை