ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பு பொறிமுறையை குழப்பும் அமெரிக்கா
ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த உடன்படிக்கையை எட்டுவதில் சிக்கல்கள் நீடிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baghaeiதெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் தாங்கள் பின்பற்றப்போவதில்லை என்றும் Esmaeil Baghaei எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த ராஜதந்திர மோதல், பிராந்திய பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




