ஈரான்மீது சக்திவாய்ந்த தாக்குதல்: ட்ரம்ப் சபதம்
இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார்.
“அது ஒரு முடிவுற்ற ஒப்பந்தமாக (Done deal) இருந்தது, ஆனால் அவர்கள் அதனை முறித்துக் கொண்டனர். அவர்கள் எப்போதும் அதைத்தான் செய்கிறார்கள்.
இந்த மக்களுடன் நாங்கள் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் – எனவே, நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர்கள் ஒரு மோசமான மக்கள் குழுவினர். அவர்கள் நீண்ட காலமாக இந்த நிலையில்தான் இருந்து வருகிறார்கள்” என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.




