மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற STF அதிகாரி நீரில் மூழ்கி பலி
கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார்.
பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு ஒன்று நேற்று (12) பிற்பகல் சோதனைக்கு சென்றதாகவும் அப்போது அவர் நீர் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து கடற்படையினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலின் போது அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





