ரஷ்ய தலைநகரை குறிவைத்து 620 இற்கு மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள்
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை மாஸ்கோ பிராந்தியத்திற்கு மேலே 180 ட்ரோன்களை , ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்தார். பின்னர், தலைநகரை நோக்கி வந்த […]













