செம்மணியில் மேலும் 10 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில், இருந்து நேற்று 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 54 வது நாளான நேற்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 09 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 108 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 572 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




