சவுதி மீதான தாக்குதல் – உலகளாவிய எண்ணெய் விநியோகம் 04 சதவீதத்தால் வீழ்ச்சி
சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வழித்தடத்தை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கி அழித்துள்ள நிலையில், அந்த பாதை மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பாதை மீளவும் திறக்கப்படாவிட்டால் ஏற்றுமதிக்கான எண்ணெய் இருப்பு தீர்ந்துவிடும் என்றும், இதனால் உலகளாவிய விநியோகத்தில் 4 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் சவுதி எண்ணெய் வாங்குநர்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர்.
சவுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளமையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சாதனை மட்டத்தில் உயர்ந்துள்ளது.
இந்நிலையானது , உலகம் முழுவதும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும், 2008-ஆம் ஆண்டு நிதி நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கப் பத்திரங்களின் வருவாயை (bond yields) மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்று உலகளாவிய விநியோகப் பற்றாக்குறையை மோசமாக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




