ஈரான் மத்திய வங்கி ஆளுநர் ரஷ்யா பயணம்!
மத்திய வங்கி ஆளுநர் தலைமையிலான ஈரான் தூதுக்குழு, இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி மற்றும் வங்கி உறவுகளை மேம்படுத்த ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதும், இரு நாட்டு மத்திய வங்கிகளுக்கு இடையே புதிய பொருளாதார ஒத்துழைப்பு வழிமுறைகளை உருவாக்குவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை ஈரான் எதிர்கொண்டு வரும் சூழலில், அதன் முக்கிய நட்பு நாடான ரஷ்யாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தங்கள் குறித்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்த பேச்சுவார்த்தை பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.




