செம்மணியில் பதின்ம வயதுடையவரின் என்புக்கூடு மீட்பு!நாணயக் குற்றியும் கண்டெடுப்பு
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயான எரிதகன மேடையின் அத்திவாரத்துக்கு அருகில் கறுப்பு நிறத்தில் வித்தியாசமான மண் படுக்கை ஒன்று கண்டறியப்பட்டது. குறித்த பகுதியில் மனித எச்சங்கள் உள்ளனவா என நேற்றுமுன்தினமும் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போது, அங்கிருந்து நாணயக் குற்றி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. […]













