யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர்கள், மின்னல் வேகத்தில் […]












